பிலிப்பீன்ஸில் உள்ள போராளி அமைப்பின் உறுப்பினராக இருந்த சிங்கப்பூரருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்தது. அப்துல் மஜீத் குஞ்சு முகம்மது 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உள்நாட்டுப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்துல் மஜீத் பிலிப்பீன்ஸின் மிண்டானாவ்வில் உள்ள மோரோ இஸ்லாமிய விடுதலை போராளி அமைப்பின் முகாமில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்புக்கு நிதி திரட்டவும் ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் அப்துல் மஜீத் உதவி செய்திருந்தார். இந்நிலையில், மறுவாழ்வுத் திட்டத்துக்கு அப்துல் மஜீத் ஒத்துழைப்பு தந்ததாக அமைச்சு தெரிவித்தது. இதனால் அவரைத் தொடர்ந்து மேற்பார்வையிடத் தேவையில்லை என்று அது கூறியது.
அப்துல் மஜீத் குஞ்சு முகம்மது. படம்: ஐஎஸ்ஏ கோப்புப்படம்

