வேலையில்லாத ஆடவர் ஒருவர் தம் இரு பிள்ளைகளைக் கொடு மைப்படுத்தியதற்காக நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தமது 10 வயது மகனையும் 9 வயது மகளையும் இடைவார் கொண்டு பலமுறை அடித்ததுடன் பற்ற வைத்த தீ மூட்டி (லைட்டர்) சாத னத்தை அவர்களுக்கு அருகே வைத்ததை அவர் ஒப்புக் கொண்டார். மேலும், பூன் லேயில் உள்ள கடை ஒன்றிலிருந்து $41 மதிப் பிலான சிகரெட்டுகளைத் திருடிய தற்காக அவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஐந்து பிள்ளைகளுக்குத் தந் தையான அந்த 33 வயது ஆடவ ருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜன வரியில் அவரது மனைவி பூன் லேயில் உள்ள அவர்களது வீட் டைவிட்டு வெளியேறினார்.
அதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்பட் டது. கடந்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதியன்று நான்கு பிள் ளைகளுடன் வீட்டில் இருந்த அந்த ஆடவர், தமது மனைவி எங்கு உள்ளார் என்று பிள்ளை களிடம் கேட்டிருந்தார். அதற்கு பிள்ளைகளில் இருவர் தமக்கு எதுவும் தெரியாது என்று பதில ளித்தனர். இதனால் கோபமடைந்த அந்த ஆடவர் அவர்கள் பொய் சொல்லியதாக நம்பினார். இரு பிள்ளைகளும் தாங்கள் பொய் சொல்லவில்லை என்று உறுதியாக தெரிவித்தபோது வெறுப்படைந்த அந்த ஆடவர் அவர்களை இடைவார் கொண்டு பலமுறை அடித்ததுடன் தீ மூட்டி யைப் பற்றவைத்து மிரட்டினார்.

