பீப்பிள்ஸ் பார்க் சென்டரில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்திற்குள் அத் துமீறி நுழைந்ததாக வழக்கறிஞர் எம் ரவி மீதும் வேறு ஓர் ஆடவர் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற் றம் சுமத்தப்பட்டது. சைனாடவுனில் உள்ள பீப் பிள்ஸ் பார்க் சென்டர் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் செயல்படும் இயூஜின் துரைசிங்கம் என்ற சட்ட நிறுவனத்தின் கிளை அலுவலகத் திற்குள் அந்த 48 வயது வழக்கறி ஞரும் 56 வயது லாய் இயூ தியாம் என்ற ஆடவரும் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட் டது.
வழக்கறிஞர் ரவியின் முழுப் பெயர் ரவி மாடசாமி. அவர் அந்தச் சட்ட அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். ஜூன் மாதம் ரவி தன்னுடைய வேலையை இழந்து விட்டதாகத் தெரிகிறது. ஜூன் 16ஆம் தேதி வாக்கில் இடத்தை காலி செய்து விடும்படி அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கறிஞராகத் தொழில் நடத்த அனுமதி கேட்டு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இரண்டு ஆண்டு காலத்திற்கு விண்ணப்பிக்க வழக்கறிஞர் ரவிக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதையடுத்து வியாழக் கிழமை வழக்கறிஞர் ரவியை போலிஸ் கைதுசெய்தது.

