தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் சோதனைச் சாவடியில் 3,100 கள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்

1 mins read

துவாஸ் சோதனைச்சாவடியில் ஏறக்குறைய 3,100 பிஸ்கெட் பெட்டிகளில் மறைத்து கொண்டுவரப்பட்ட கள்ளச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வந்த லாரியில் அவை கண்டுபிடிக்கப்பட்டன என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. அந்த லாரி நேற்று முன் தினம் துவாஸ் சோதனைச்சாவடியில் அதிகாலை 3.45 மணிக்குப் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 21 வயது, 29 வயது மதிக்கத்தக்க மலேசிய ஆடவர்கள் இருவர் விசார ணைக்காக சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த லாரியும் கைப்பற்றப்படக்கூடும். செலுத்தப்படாத ஒட்டு மொத்த வரியின் மதிப்பு $240,560 என்றும் செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் மதிப்பு $17,820 என்றும் ஆணையம் குறிப்பிட்டது.