சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அடுத்த வாரம் ஜெர்மனியில் நடைபெற வுள்ள ஜி20 உச்சநிலை கூட்டத்தில் சந்திக்கவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சு நேற்று அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பிரதமர் லீ கடைசியாக அதிபர் டிரம்ப்புடன் கடந்த ஏப்ரலில் தொலைபேசியில் பேசினார். அப்போது திரு லீயை தொலைபேசிவழி அழைத்த திரு டிரம்ப், சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த திரு லீயை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். திரு டிரம்ப்பின் அழைப்பைத் தாம் ஏற்றுக்கொண்டதாக வும் இவ்வாண்டு அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் திரு லீ, மே தினக் கூட்ட உரையில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இம்மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உச்சநிலைக் கூட்டத்தில் இரு தலைவர்க ளும் முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்.
ஜெர்மனியில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கவுள்ள பிரதமர் லீ சியன் லூங்
1 mins read

