கத்திக்குத்து; 60 வயது நபர் கைது, மருத்துவமனையில் 39 வயது நபர் மரணம்

கத்திக்குத்து; 60 வயது நபர் கைது, மருத்துவமனையில் 39 வயது நபர் மரணம்

2 mins read

பூன் டாட் ஸ்திரீட்டில் நேற்று கத்திக்குத்துக்கு ஆளான 39 வயது நபர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். இதன் தொடர்பில் 60 வயது சந்தேக நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பூன் டாட், தெலுக் ஆயர் ஸ்திரீட் சந்திப்பில் உள்ள காப்பிக் கடையில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது என அறியப்படு கிறது. சம்பவத்தை நேரில் பார்த்ததாக நம்பப்படும் 31 வயது சைமன், "முப்பது வயதுகளில் இருந்த ஒருவர் ரத்தம் தோய்ந்த டீ சட்டை யுடன் ஓடியதாகக் கூறினார். "போலிசைக் கூப்பிடுங்கள் என்று கத்திக்கொண்டே அவர் ஓடினார். அவர் முகத்தில் அச்சம் தெரிந்தது. வழக்கத்திற்கு மாறாக ஏதோ திரைப்படம்போல இருந்தது," என்றும் அவர் சொன்னார். இதற்கிடையே எண் 25 பூன் டாட் ஸ்திரீட்டில் நடைபெற்ற சம்ப வம் குறித்து பிற்பகல் 12.45 மணி யளவில் தகவல் கிடைத்ததாகவும் முப்பது வயதுகளில் இருந்த ஒரு வரை மீட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

வாடிக்கையாளர் சேவை நிர் வாகியான சோ டான், 26, சம் பவத்தை நேரில் பார்க்கவில்லை யென்றாலும் அதிகாரிகள் சந்தேக நபரை கை விலங்கிட்டு அழைத்துச் செல்வதைப் பார்த்தார். "சந்தேக நபர் நல்ல உடை உடுத்தியிருந்தார். காவல்துறை யினர் தம்மை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக அவர் அமைதியாகக் காத்திருந்தார்," என்று சோ டான் சொன்னார். சம்பவத்திற்குப் பிறகு பூன் டாட் சாலையெங்கும் ரத்தம் சிந்தியிருப் பதைக் காண முடிந்தது. ஆனால் அருகில் உள்ள காப்பிக் கடையில் இருந்த பலருக்கு கத்திக்குத்து சம்பவம் பற்றி தெரிய வில்லை. தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் கடை வைத்துள்ள 70 வயது யென் யின் லியோங், மதிய உணவு நேரமாக இருந்ததால் வேலையில் மும்முர மாக இருந்தோம். சந்தேகப்படும்படி எதுவும் நடைபெறவில்லை. காவல் துறையினர் தடுப்புகளை போட்ட பிறகே சம்பவம் குறித்து தெரிய வந்தது," என்றார்.