ஆடவர் ஒருவருக்குக் கொடுங் காயங்கள் ஏற்படுத்தியதாக 34 வயது பங்ளாதேஷி மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது. அந்த ஆடவர் பின்னர் மாண்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கும் 7.43 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் லோரோங் 24ஏ கேலாங் அருகே கேலாங் ரோட்டின் நடை பாதையில் இச்சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
லிம் லியோங் டாட், 42, என்பவர் மீது ரானா சோஹெல் எனப் படும் பங்ளாதேஷி மேலும் மூன்று பங்ளாதேஷியருடன் இணைந்து தாக்கியதாகக் குற்றம் சாட்டப் பட்டது. லிம்மின் முகத்தில் அவர் கள் குத்தியதாகவும் தலையை நடைபாதை மீது மோதியதாகவும் அதன் காரணமாக லிம் மரண மடைந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் அடை யாளங்களைத் திரட்டிய போலிஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் ரானாவைக் கைது செய்தனர். திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட மற்றொரு பங்ளா தேஷியிடம் விசாரணை நடை பெற்று வருகிறது. சம்பவத்தில் தொடர்புடைய இதர இரு பங் ளாதேஷியர் இன்னும் தலைமறை வாக உள்ளனர்.
கேலாங்கிலுள்ள காப்பிக் கடை ஒன்றில் இரு குழுக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள் 'வான்பாவ்' செய்தித்தாளிடம் தெரிவித்தனர். தகராற்றைத் தீர்க்க ஓர் ஆடவர் முயன்றதாகவும் பின்னர் அவர் மாண்டுகிடக்கக் காணப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய போலிஸ் பிரிவில் விசா ரணைக் காவலில் வைக்கப் பட்டுள்ள ரானா மீண்டும் வரும் 18ஆம் தேதி நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவார். கொடுங்காயங்கள் ஏற்படும் அளவுக்குத் தாக்கிய குற்றம் நிரூ பிக்கப்பட்டால் பத்தாண்டு வரை யிலான சிறை, அபராதம், பிரம்படி ஆகியன விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்ட ரானா சோஹெல், 34. மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவர் தலைமறைவாக உள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

