ராபின்சன் ரோடு அருகே உள்ள பூன் டாட் ஸ்திரீட்டில் கடந்த திங் கட்கிழமை நிகழ்ந்த கொலை தொடர்பாக 69 வயது ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. டான் நாம் செங் எனப்படும் அவர் 'டிஎன்ஸ் ஓசன் லைன்ஸ்' என்னும் கப்பல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஸ்பென்சர் டுப்பானி ஷாம்லால் டுப்பானி, 38, என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டுகள் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டபோது டான் சலன மின்றிக் காணப்பட்டார். கொலை செய்யப்பட்ட திரு டுப்பானி இவ ரது மருமகன். நாள்பட்ட நோய் இருப்பதால் உடல்நிலை சரியாக இருப்பதை உறுதிசெய்ய குடும்பத் தாரிடம் இரண்டு நிமிடம் பேச தமது கட்சிக்காரரை அனுமதிக்கு மாறு டானின் வழக்கறிஞர் எண்டி சியோக் நீதிபதி கிறிஸ்டோஃபர் கோவிடம் வேண்டினார்.
அதனைத் தொடர்ந்து 'மருந்து களை வைத்திருக்கிறீர்களா?' என டானிடம் நீதிபதி வினவியபோது 'ஆம்' என்று டான் பதில ளித்தார். விசாரணை நடப்பதால் அவரை மற்றவருடன் தொடர்புகொள்ள நீதிபதி அனுமதி மறுத்தார். மத்திய போலிஸ் பிரிவில் விசா ரணைக் காவலில் வைக்கப்பட் டுள்ள டான் மறுபடியும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப் படுவார். கொலைக் குற்றம் நிரூ பிக்கப்பட்டால் டானுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இந்நிலையில் டானின் மகளும் கொலை செய்யப்பட்ட டுப்பானியின் மனைவியுமான டான் செங் செங், 43, விடுத்துள்ள அறிக்கையில் தமது குடும்பத்துக்கு இரட்டைத் துயர் நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள் ளார். "அன்பான ஒருவரை எனது குடும்பம் இழந்துவிட்டதோடு அன் புக்குரிய எனது தந்தை கடுமை யான குற்றச்சாட்டை எதிர்நோக் கும் நிலைமை ஏற்பட்டுள்ளது," என்றார் அவர். தமது குடும்பத்தின் அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அந்த மாது, "எங்களது மிதமிஞ்சிய துயரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட முடியாது. இருப்பினும் நிலைமையப் புரிந்துகொண்டு அமைதி காப்போம்," என்றார்.

