தகவல் தொடர்புத் துறையில் அதிக உள்ளூர்வாசிகள்: அமைச்சர் லிம்

தகவல் தொடர்புத் துறையில் அதிக உள்ளூர்வாசிகள்: அமைச்சர் லிம்

2 mins read

சிங்கப்பூர் அறிவார்ந்த தேசம் என்ற தனது இலக்கை அடைவதில் தகவல் தொடர்புத் துறை முக்கியப் பங்காற்றும் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித் துள்ளார். ஆகையால், தகவல் தொடர்புத் துறையில் மனிதவளத்தை மேம் படுத்துவது அவசியம் என்று அமைச்சர் லிம் வலியுறுத்தி இருக் கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தகவல் தொடர்புத் துறையில் கூடு தலாக 13,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய திரு லிம், இப்போது அத்துறையில் பணியாற்றுவோரில் சிங்கப்பூரர் களும் நிரந்தரவாசிகளும் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இருக்கின் றனர் என்றும் குறிப்பிட்டார். சிங்கப்பூர் கணினி சமுதாயம் நேற்று ஏற்பாடு செய்திருந்த தொழில்துறைக் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு பேசினார். 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் 4.1% என்ற அளவில் தகவல் தொடர்புத் துறையில் வேலை வாய்ப்பு வளர்ச்சி கண்டதாகக் குறிப்பிட்ட அவர், அத்துறை நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கி வரு வதாகவும் சொன்னார்.

தகவல் தொடர்புத் துறையின் 80% வேலைவாய்ப்புகள் 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர் கள், நிர்வாகிகள், தொழில்நுட் பர்கள் ஆகியோரைச் சென்றடை வதாகவும் அத்துறையின் இடை நிலை ஊதியம், தேசிய இடைநிலை ஊதியத்தைவிட 30% அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படியிருக்க, இந்தத் துறை யில் மேலும் அதிக உள்ளூர்வாசிகள் சேர்ந்து, நீடித்திருப்பதற்கு வகை செய்யும் விதத்தில் 'டெக்ஸ்கில்ஸ் ஆக்சலரேட்டர்' மேம்படுத்தப்பட்டு, வேறு துறைக்கு மாறும் திட்டத்தின் பரப்பெல்லை விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இதன்மூலம், தகவல் தொடர்புத் துறையைவிட்டு வெளியேறியவர் கள் உதவி பெற்று மறுபடியும் அத் துறையில் புதிய வேலைவாய்ப்பு களைப் பெறவும் மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது திறன் களை மேம்படுத்திக்கொண்டு இத் துறையினுள் சேரவும் முடியும் என்று அவர் விவரித்தார்.