ஆசியாவின் நிலைத்தன்மைக்கு சிங்கப்பூர், இந்தோனீசியா இணைந்து செயல்பட உறுதி

ஆசியாவின் நிலைத்தன்மைக்கு சிங்கப்பூர், இந்தோனீசியா இணைந்து செயல்பட உறுதி

2 mins read

ஆசியான் வட்டாரத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை போன்றவற்றைக் கட்டிக்காக்க சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் இணைந்து செயல்படுவதற்கு உறுதி பூண்டுள்ளன. அதன் மூலம் இந்த இரு நாடுகளும் உலக அமைதிக்குப் பங்களிக்கும் என இந்தோனீசிய தற்காப்புத் துறையின் தலைவர் ஜெனரல் கட்டோட் நுர்மண்டோ கூறினார். இரு நாடுகளின் உயர் நிலைக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தோனீசியாவில் நடந்த அந்தக் கூட்டத்தில் சிங்கப்பூர் தற்காப்புப் படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பெர்ரி லிம் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இந்தோனீசியத் ராணுவத் தலை வர் கட்டோட் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த உயர்நிலைக் கூட்டத்தில் இரு நாடுகளின் ராணுவத் தலை வர்கள் இந்த வட்டாரத்தின் பாது காப்பு, தற்காப்பு போன்றவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். 2012ஆம் ஆண்டில் இரு நாடு களுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவு, உளவுத்துறை, பயிற்சி, பயிற்சிக்கான இடம் வழங்குவது போன்றவற்றைக் கண்காணிக்க குழு ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் கண்டன. இந்த இரு நாடுகளின் ராணு வத் தலைவர்கள், உயர் அதி காரிகளின் ஆண்டுக் கூட்டம் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த் தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது வெளி யிடப்பட்ட உரையில், ஜென ரல் கட்டோட், அமைதியும் பாது காப் பும் கட்டிக்காக்கப்படுவதன் மூலம் ஆசியான் வட்டாரத்தில் நிலைத் தன்மையை ஏற்படுத்தி வர்த்தகம், தொழிற்துறை முன் னேற் றங் களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முடியும் என்றார். அப்போது பேசிய சிங்கப்பூர் தற்காப்புப் படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பெர்ரி லிம், "சிங்கப்பூர், இந்தோனீசிய உறவுகள் மேலும் வலுவடைந்து வருவதாகக் கூறினார்.