இணையப் பயன்பாட்டிற்கு அடிமை யா தல், இணையக் குற்றங்களுக்கு இலக்காதல் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளும் இளையர்களை மீட்க புதிய தளம் ஒன்று தொடங் கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைபேசி அழைப்பு, மின் னஞ்சல், இணையம் வழி நேரடி உரையாடுதல் போன்ற வசதி களைப் பயன்படுத்தி பயிற்சிபெற்ற ஆலோசகர்களின் ஆலோச னையைப் பெறலாம். இணையம் சார்ந்த பிரச்சினை களில் சிக்கித்தவிக்கும் இளையர் களுக்கு அனைத்து வகைகளிலும் உதவ சிங் கப்பூரில் முதன்முதலாக இந்தத் தளம் தொடங்கப்பட்டுள் ளது. www.help123.sg என்ற அந்த இணையத் தளம், தேசிய சமூக சேவை மன்றம், சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகிய வற்றின் ஏற்பாட்டில் தொடங் கப் பட்டுள்ளது. இதில் 12 வயது முதல் 18 வயதுடைய 13 இளையர்கள் கொண்ட ஆலோச னைக் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் அல்லது குடும்ப உறுப் பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அந்த இணையத் தளத்தைப் பயன்படுத்தி ஆலோசனை பெற லாம். இந்த இணையத்தளத்தை உள்துறை, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிங் கப்பூர் எக்ஸ்போவில் நேற்று தொடங்கி வைத்தார். இணையக் குற்றங்களுக்கு இளையர்கள் இலக்காவதைத் தடுக்கும் பொருட்டு இந்த இணை யத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இணையக் குற்றங்களில் இளையர்கள் சிக்கிக்கொள்ளும் பிரச்சினைகளுடன் அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை யாகும் பிரச்சினை வளர்ந்து வருவ தையும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ சுட்டிக்காட்டினார்.

