புதன்கிழமை இரவு வடக்கு-கிழக்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஏற்பட்ட சேவைத் தடைகளுக்கு மின்தடையே காரணம் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியுள்ளது. துவாஸ் கிடங்கு நிலையத்தில் ஏற்பட்ட மின்தடையால் இந்த இரு ரயில் பாதைகளிலும் மின்தடை ஏற்பட்டது என எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ஊடக தகவல் தொடர்புப் பிரிவின் துணைத் தலைவர் திரு பேட்ரிக் நாதன் நேற்று தெரிவித்தார். சேவைத் தடையின்போது இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் நேற்று காலை வழக்கமான சேவை திரும்பியது.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் சேவைத் தடைக்கு மின்தடை காரணம்
1 mins read

