பிற இனத்தவர், பிறநாட்டவர் மீதான இளையரின் மனப்போக்கு மேம்பட்டுள்ளது

பிற இனத்தவர், பிறநாட்டவர் மீதான இளையரின் மனப்போக்கு மேம்பட்டுள்ளது

1 mins read

பிற இனத்தவர், பிற நாட்டவர் குறித்த இளையர்களின் மனப்- போக்கு மேம்பட்டுள்ளதாக 3,531 இளையர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது. தேசிய இளையர் மன்றம் நேற்று வெளியிட்ட தேசிய இளையர் ஆய்வு 2016ன் முக்கிய கண்டறி- தல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆய்வில் 15 வயது முதல் 34 வயது வரையுள்ள இளையர்- களிடம் தேசியப் பெருமை, எதிர்காலம் பற்றிய அவர்களின் விரும்பங்கள், பொதுத்துறையில் ஈடுபாடு போன்றவை குறித்து கருத்தெடுக்கப்பட்டது. 2002ல் தொடங்கப்பட்டதி லிருந்து இந்த ஆய்வு தற்போது ஐந்தாவது முறையாக நடத்தப் பட்டுள்ளது. "வேறு இனத்தைச் சேர்ந்தவர்- களுடன் வேலை ஆறுதல் அளிக் கும் வகையில் உள்ளது" என்ற கருத்துக்கு இளையர்கள் 5 புள்ளி அளவுகோலில் சராசரியாக 4.55 என்று மதிப்பளித்தனர். இதில் 5 என்று மதிப்பளித்தால் வலுவாக ஒத்துக்கொள்கிறோம் என்பதாகும்.

இதுவே, கடந்த 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 4.37 ஆக இருந்தது. வேறு நாட்டவருடன் இணைந்து பணி யாற்றுவதில் ஆறுதல் அளிக் கும் வகையில் உள்ளது என்ற கருத்துக்கும் 2013ல் 4.11 ஆக இருந்த குறியீடு, சென்ற ஆண்டு 4.44 ஆக உயர்ந்தது. அத்துடன், வேறு இனத்தில் நெருங்கிய நண்பர்கள் உள்ளவர்- கள் எண்ணிக்கை 2013ல் 53 விழுக்காடாக இருந்தது, 2016ல் 60 ஆக உயர்ந்துள்ளது.