தேசிய தின அணிவகுப்பைக் காண்பதற்கான நுழைவுச் சீட்டுகள் கேரோசெல், ஈபே, கிராக்லிஸ்ட் போன்ற இணையச் சந்தைகளில் $400 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு நுழைவுச்சீட்டுகளை அதிகப்படியான விலைக்கு விற்பவர்களுக்கு எதிர்காலத்தில் நுழைவுச் சீட்டுகளுக்கான குலுக் களில் பங்கேற்க தேசிய தின குழு தடைவிதிக்கும் என்ற கட்டுப்பாடு உள்ளபோதும் இவ்வாறு சிலர் விற்கின்றனர். 'jytx89' என்ற பெயரில் இணையவாசி ஒருவர் 38 தேசிய தின அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டுகளை $50க்கு ஒன்று என்ற வீதத்தில் கேரோசெல் இணையத் தளத்தில் விற்கும் புகைப்படம் இணையத்தில் பரவலாகி உள்ளது.
இந்த நுழைவுச் சீட்டுகள் நிறுவன ஒதுக்கீடாகக் கிடைக்கப்பெற்றது என்று அதில் அவர் கூறியுள்ளார். "இதைச் செய்தற்காக சென்ற ஆண்டு நாங்கள் அபராதம் செலுத்த வே-ண்டி வந்தது. நாங்கள் விரும்பியதெல்லாம் சிறிது லாபம் சம்பாதித்து பல குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதே," என்று அவர் கூறினார். ஆனால், தேசிய தின நுழைவுச்சீட்டுகளை கள்ளத்தன மாக விற்பதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை என அறிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியுள்ளது.

