மனநலப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் எம்ஆர்டி ரயில்கள்

மனநலப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் எம்ஆர்டி ரயில்கள்

1 mins read
f2526a1e-d5b0-42c7-80ed-85623bebc6b3
-

மனநலப் பிரச்சினையைக் கருப் பொருளாகக் கொண்ட எம்ஆர்டி ரயில்கள் நேற்று காலையிலிருந்து வடக்கு=கிழக்கு ரயில் பாதையில் சேவைக்கு விடப்பட்டன. மனநலப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அப்பிரச்சினையால் பாதிக்கப் பட்டோருக்கு உதவி செய்ய பொது மக்களை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 'டச்' சமூகச் சேவைகளும் நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியும் இணைந்து நடத்துகின்றன.

அடுத்த நான்கு வாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்துக்கு இந்த ரயில்கள் பயணிகளுக்குச் சேவை வழங்கும். ஏறத்தாழ 840,000 பயணி களுக்கு மனநலப் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு கொண்டிருப்பதாக எஸ்பிஎஸ் நிறுவனத்தின் விளம் பரப் பிரிவான 'மூவ் மீடியா' தெரி வித்துள்ளது. பதற்றம் தொடர்பான குறை பாடுகள், மன அழுத்தம், 'ஸ்கிட் சோஃபிரீனியா' ஆகிய மனநலப் பிரச்சினைகள் குறித்த தகவல்கள் இந்த ரயில்களில் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று மனநலப் பிரச்சி னைகள் பலரைப் பாதித்துள்ள தாலும் பொதுமக்களிடையே இவை குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதாலும் இவற்றை மேற்கோள்காட்ட நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.