கமலுக்கு ஏன் திடீர் ஞானோதயம்: தமிழிசை

கமலுக்கு ஏன் திடீர் ஞானோதயம்: தமிழிசை

2 mins read
4f4a31dc-453f-4951-9cc0-2daffd2530b5
-

சென்னை: தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்த தையடுத்து, நடிகர் கமலுக்கு ஆளுங்கட்சியினர் கடும் கண் டனம் தெரிவித்துவரும் நிலை யில், கமலுக்கு திடீரென ஞானோ தயம் வருவது ஏன் என்று தமிழக பாஜக தலைவி தமிழிசையும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திப் படங்களில் நடித்து ஆதாயம் ஈட்டிய கமல்ஹாசன், இப்போது திடீரென இந்தி எதிர்ப் பிற்காக குரல் கொடுத்தேன் என்று கூறுவது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக என்று குரல் கொடுத்தது முதற் கொண்டே தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஊரே கூடி 'ஊழல் ஊழல்' என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பும் சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதி சயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதி சயம் எனத் தமிழக அமைச்சர்களை மறைமுகமாகச் சாடியுள்ளார். இதையடுத்து தமிழக முதல் வரும் அமைச்சர்களும் அவருக்குப் பதிலடி கொடுத்து வரு கின்றனர். இந்நிலையில் தமிழிசை தன் பங்கிற்கு கமலை விமர் சித்துள்ளார். "திரைத்துறையில் இருந்தாலும் நடிகர் ரஜினி போல சமூக கருத்துக்களை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை.

ரஜினியைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளைப் பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது ஏன் என்று தெரியவில்லை. "அரசியல் என்பது டுவிட்டர் தளத்தில் இல்லை. அது மக்களு டன் நிஜ தளத்தில் இருக்கிறது. அதை கமல் உணர வேண்டும்," என தமிழிசை தெரிவித்துள்ளார்.