புதுடெல்லியில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்

1 mins read
d3f8b07e-6a0a-4ecd-9001-6776dfb93169
-

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் மூத்த இந்திய பொருளி யலாளர்களையும் திரு தர்மன் சந்தித்து உரையாடினார். 'இந்திய மேம்பாட்டு உத்திகள், உலகமய மாக்கலுக்குப் பிறகு அனைத்துலகப் பங்கேற்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற பொருளியல் மாநாட்டில் பொருளியல், சமுதாயக் கொள்கைளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் முக்கிய உரை நிகழ்த்தினார். பின்னர் நம்பகத் தன்மையையும் ஆற்றலையும் மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார். படம்: பிடிஐ