பணிப்பெண்களின் பராமரிப்புத் திறன்களை மேம்படுத்த புதிய திட்டம்

பணிப்பெண்களின் பராமரிப்புத் திறன்களை மேம்படுத்த புதிய திட்டம்

1 mins read

கைக்குழந்தைகள், மூத்தோர் ஆகியோரைப் பராமரிக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கு பயிற்சி வழங்கும் புதிய திட்டம் நேற்று அறிமுகம் கண்டது. சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணியாளர் சங்கம் இந்தப் பயிற்சிகளை வழங்குகிறது. இவற்றுக்கான கட்டணம் $90 முதல் $480 வரை இருக்கும். மூத்தோர் பராமரிப்புப் பயிற்சி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதியிலிருந்து தொடங்கும். கைக்குழந்தைப் பராமரிப்பு பயிற்சி ஏற்கெனவே நடப்பில் உள்ளது. தவிர, பணிப்பெண்களுக்கான மற்ற பயிற்சி வகுப்புகளையும் இந்தச் சங்கம் வழங்கி வருகிறது.