மலேசியாவின் சரவாக், பேராக் மாநிலங்களில் ரேபிஸ் என் னும் வெறிநாய்க் கடி நோய் பரவி அதற்கு ஐந்து பேர் பலியா னதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் வேளாண் உணவு கால் நடை மருத்துவ ஆணையம் இங்குள்ளவர்களுக்கு வேண்டு கோள் ஒன்றை விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட செல்லப் பிராணி கடைகள், செல்லப் பிராணி வளர்க்கும் இடங்கள் மற்றும் அவற்றைக் காக்கும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து மட்டுமே செல்லப் பிராணி களை பெறுமாறு ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இவ்வட்டாரத்தில் பரவி வரும் நோயால் அந்த நோய் தொற்றாத நிலையை சுலபமாக இழந்துவிட முடியாது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு வரை 110 கடத்தல் நாய்களை ஆணையம் கைப்பற்றி உள்ளது. அவை செம்பவாங் விலங்கு நோய்த் தொற்றொதுக்க நிலையத்தில் 100 நாட்கள் அனுமதிக்கப்பட்டு ரேபிஸ் போன்ற நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ளனவா என்று கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் செல்லப் பிராணி பெற வலியுறுத்து
1 mins read
-

