ஜூனில் உற்பத்தித் துறை 13.1% வளர்ச்சி சிங்கப்பூரின் உற்பத்தித் துறை

ஜூனில் உற்பத்தித் துறை 13.1% வளர்ச்சி சிங்கப்பூரின் உற்பத்தித் துறை

1 mins read

ஆண்டுக்காண்டு அடிப்படையில் கடந்த மாதம் 13.1 விழுக்காடு விரி வடைந்தது. இது அந்தத் துறை கண் டிருக்கும் 11வது மாதத் தொடர் வளர்ச்சி. ஜூன் மாதத்தில் தயாரிப்புத் துறை 8.5 விழுக்காடு வளரும் என்று புளும்பெர்க் வாக்கெடுப்பில் ஆய்வாளர்கள் முன்னுரைத்து இருந்ததைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. பருவத்திற்கு ஏற்ப சரிக்கட்டப் படும் தொழிற்சாலைப் பிரிவு ஜூன் மாதத்தில் 9.7 வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 3.6 விழுக்காடுதான் வளர்ச்சி காணும் என்னும் முன் னுரைப்பை அது முறியடித்துள்ளது. உயிர்மருத்துவ உற்பத்தியை விலக்கிவிட்டுப் பார்த்தால் உற் பத்தித் துறை 4 விழுக்காடு வளர்ந்திருப்பதாக பொருளியல் வளர்ச்சி மன்றம் நேற்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.