புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம், முதல் மேம்பட்ட சமூக மன்றமாக கட்டட, கட்டுமான ஆணையத்தால் 'கிரீன் மார்க் கோல்ட் ப்ளஸ்' சான்றிதழைப் பெறும் அளவுக்கு புதுப்பொலிவு கண்டுள்ளது. சூரியசக்தித் தகடுகள், எரி சக்திப் பயன்பாட்டு உணர்கருவி கள் போன்றவை அதன் புதுப் பிப்புப் பணிகளில் சேர்க்கப்பட்டுள் ளன. சமூக மன்றத்தின் மேல் கூரையில் பொருத்தப்பட்டுள்ள 150 சூரிய சக்தித் தகடுகளால் குறைவான எரிசக்தி பயன்படுத்தப் படும். மேலும் எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணிக்கப் பொருத்தப்பட்டு உள்ள 50 உணர்கருவிகள் எரி சக்தி வீணாவதையும் எரி சக்தியைச் சேமிக்கும் வழிகளையும் உணர்த்தும். இந்தப் புதிய முறையால் இந்த சமூக மன்றத்தின் எரிசக்தி நுகர்வு கிட்டத்தட்ட 31 விழுக் காடு சேமிக்கப்பட்டுள்ளது. வழக்க மான ஒளிவிளக்குகள் அனைத் தும் 'எல்இடி' விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல பல காலமாக வழக்கத்தில் இருக் கும் குளிரூட்டி சாதனங்கள் எரி சக்தி சேமிக்கும் குளிரூட்டி களாக மாற்றம் கண்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக மாதத்திற்கு 30,000 கிலோவாட் என்றிருந்த எரிசக்தி பயன்பாடு 15,000 கிலோ வாட்டாக, அதாவது பாதிக்குப் பாதி குறைந்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
மேல்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தித் தகடுகள். படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்

