நகைக் கடைகள் இருப்புகளைக் கணக்கெடுக்கவும் தொலைந்து போன விலை மதிப்புள்ள பொருட் களைக் கண்டறியவும் ஆர்எஃப் ஐடி (ரேடியோ ஃப்ரிக்வென்ஸி ஐடெண்டிஃபிகேஷன்) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தத் தொடங்கி உள்ளன. இதன்மூலம் இதுபோன்ற செயல்களுக்கு ஆகக்கூடிய நேர மும் மனஉளைச்சலும் மிச்சப் படுவதால் உற்பத்தித்திறன் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புகளைக் கணக் கெடுப்பதற்கு அதிக ஊழியர் களைச் சார்ந்திருப்பதும் குறை யும். கிட்டத்தட்ட 15 உள்ளூர் நகைக் கடைகள் இந்தத் தொழில்நுட்பத் தின் மூலம் பயனடைந்து வரு வதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவிக்கிறது.
அவ்வாறு பயன டைந்த கடைகளில் ஒன்றாக நீ சூன் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் ஜேன் ஹோ தெரிவிக்கையில், "ஆர்எஃப்ஐடி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, தொலைந்துபோன பொருட் களைக் கண்டுபிடிக்க ஒருநாள் முழுவதும் தேட வேண்டியிருந்தது. "ஆனால் இப்போது அதற்கு ஒரு மணி நேரத்துக்கும் குறை வாகவே ஆகிறது," என்றார். நேற்று அந்தக் கடையில் ஆர் எஃப்ஐடி தொழில்நுட்ப சாதனம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர் நகை வியாபாரிகள் சங்கத்தின் முயற்சியில் உருவான இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் அதிகமான நகைக் கடைகள் பயன்படுத்தத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை நடப்புக்குக் கொண்டுவர கிட்டத் தட்ட ஓராண்டு காலமும் 50,000 வெள்ளி பணமும் செலவானதாக குமாரி ஹோ தெரிவித்தார். 'ஸ்பிரிங் சிங்கப்பூர்', வர்த்தக, தொழில் அமைச்சு மற்றும் இதர குழுக்களுடன் இணைந்து இதனை அமல்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.
நகைக் கடை ஒன்றில் பயன் படுத்தப்படும் 'ஆர்எஃப்ஐடி ஸ்கேனர்'. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

