தாதியர்களுக்கான அதிபர் விருதைப் பெறும் திருவாட்டி குட்டியம்மாள்

தாதியர்களுக்கான அதிபர் விருதைப் பெறும் திருவாட்டி குட்டியம்மாள்

1 mins read
5638533d-556d-4061-9840-3c9af9dfceaa
-

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள எவர்ட் டன் பார்க் குடியிருப்புப் பேட்டையில் சிறு வயது முதல் வசித்த வந்த குட்டியம்மாளுக்கு அங்கு வேலைக்குச் சென்று திரும்பும் வெள்ளை நிறச் சீருடை அணிந்த தாதிகளைப் பார்ப்பது என்றால் கொள்ளை பிரியம். அவர்களைப்போல தானும் ஒரு நாள் தாதியாக வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் உதித்தது. மேலும் 'கை வைத்தி யம்' தெரிந்த அவரது தாயாரைப் பலரும் தேடி வந்ததையும் பார்த்து வளர்ந்தார். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தாயாரின் நோக்கமும் தாதி யாக வேண்டும் என்ற தனது விருப்பமும் சேர்ந்து அவரை தாதி மைத் துறைக்கு அழைத்துச் சென் றது. இந்த ஆண்டோடு 40 ஆண்டு களாகத் தாதிமைத் துறையில் முத்திரை பதித்த திருவாட்டி குட்டியம்மாளுக்கு இத்துறையின் மிக உயரிய அதிபர் விருது நேற்று கிடைத்தது. உதவித் தாதியாகப் பணியில் சேர்ந்த குட்டியம்மாள், தாதிமை நிர்வாகி, மூத்த தாதிமை நிர்வாகி, உதவித் தாதிமை இயக்குநர், தாதிமை இயக்குநர் என்று படிப் படியாக உயர்ந்து இறுதியில் தலை மைத் தாதி என்ற பதவியை எட்டி னார்.

ஜூரோங் சுகா தாரக் குழுமம் அலெக்சாண்டிரா மருத்துவ மனையில் தொடங்கியதில் இருந்து இங் டெங் ஃபோங் பொது மருத் துவமனை உரு வாக்கப்பட்டது வரை திருவாட்டி குட்டியம்மாளின் பங்கு அளப்பரி யதாக இருந் தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்