சமூகத்தின் ஒரு சவால்மிக்க பிரச்சினையைச் சந்திக்க நேர்ந் தால் அரசாங்க அமைப்புகளிடமி ருந்து உதவி வரும் வரை காத்தி ருக்காமல் அடித்தள முயற்சிகள் மூலம் தீர்வு காண்பது அடித்தளக் கட்டமைப்பின் வலுவான ஒருங்கி ணைப்பை எடுத்துரைக்கிறது என்று பிரதமர் அலுவலக அமைச் சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார். புக்கிட் பாத்தோக் தனித் தொகுதிக்கு நேற்று அமைச்சர் நிலை வருகை மேற்கொண்ட திரு சான், அங்கு நடந்த ஒரு சம்ப வத்தை மேற்கோள் காட்டி இவ் வாறு கூறினார். கடந்த ஆண்டு பிற்பகுதியில் புக்கிட் பாத்தோக்கில் கட்டப்பட்ட 'ஸ்கைலைன் ஒன்' எனும் புதிய பிடிஓ அடுக்குமாடி வீட்டுத் தொகுதி ஒன்றின் 24வது மாடியில் இருந்த தோட்டத்தின் கூரையில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த மாணவர்கள் சிலர் ஏறி அமர்ந்தி ருந்ததை அடித்தளத் தலைவர்கள் சிலர் பார்த்தனர்.
'பிடிஓ டாஸ்க்ஃபோர்ஸ்' எனும் அந்தப் பணிக்குழுவின் உறுப்பினர் பொதுவில் அந்தப் புதிய பிடிஓ வீடுகளுக்குக் குடிவருவோருக் குத் தேவையான ஆலோசனைக ளையும் உதவிகளையும் செய்வார் கள். மாணவர்களின் இந்தச் செயல் அவர்களுக்கு ஆபத்தை விளை விப்பதோடு மட்டுமல்லாமல், வீண் பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்ற அக்கறையில் அக்குழுவுக் குத் தலைமை தாங்கும் அடித்த ளத் தலைவர்கள் ராஜசேகரன் பிர காசமும் ஆல்பர்ட் லீயும் செயலில் இறங்கினர்.
குடியிருப்பாளர் களுடன் அமைச்சர் சான் சுன் சிங் (வலமிருந்து 2வது) வலக்கோடியில் புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை. படம்: வான் பாவ்

