தியோங் பாரு நான்காவது மாடி வீட்டில் தீ; மருத்துவமனையில் இருவர் அனுமதி

தியோங் பாரு நான்காவது மாடி வீட்டில் தீ; மருத்துவமனையில் இருவர் அனுமதி

1 mins read
5a31cc46-efe1-4919-9cac-d4dc82b220f6
-

தியோங் பாருவில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகலில் தீப் பற்றியது. அதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் சேதமுற்ற பகுதிகள் கீழே விழுந்தன. பாதிக்கப்பட்ட வீடு தியோங் போ ரோடு புளோக் 82ன் நான் காவது தளத்தில் உள்ளது-. பிற்பகல் 1.30 மணிவாக்கில் அந்த வீட்டினுள் இருந்து புகை வருவதைக் காண முடிந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.

சம்பவ இடத்தில் போலிஸ் கார்கள், போலிஸ் மோட்டார் சைக்கிள்கள், ஓர் ஆம்புலன்ஸ் வண்டி, ஒரு தீயணைப்பு வாக னம், ஒரு ரெட் ரைனோ தீய ணைப்பு வாகனம் போன்ற அவ சரகாலச் சமாளிப்பு வாகனங்கள் காணப்பட்டன. தீயணைப்பாளர்கள் அந்த வீட்டின் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டில் இருந்தவர்களில் ஒருவரின் இடதுகால் பாதத்தில் தீப்புண் ஏற்பட்டதாக அப்பகுதி யில் வசிக்கும் வெண்டி சோங் என்பவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

தீப்பிடித்த வீட்டிலிருந்து உடைந்த பொருட்கள் கீழே விழுந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்