பயங்கரவாத மிரட்டல்களை எதிர்கொள்ள தேசிய சேவையாளருக்கு புதிய பயிற்சியகம்

பயங்கரவாத மிரட்டல்களை எதிர்கொள்ள தேசிய சேவையாளருக்கு புதிய பயிற்சியகம்

1 mins read
25213b1d-cc07-4b3d-a35a-e1139aeefb61
-

முழுநேர தேசிய சேவையாளர்களுக் கும் தயார்நிலை தேசிய சேவை யாளர்களுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பில் பயிற்சி அளிக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் புதிய பயிற்சியகம் நேற்று அதிகாரபூர்வ மாகத் திறக்கப்பட்டது. ஐலண்ட் டிஃபென்ஸ் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் என்ற பெயர் கொண்ட அந்தப் பயிற்சி யகம், பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்கொள்ள ராணுவ வீரர்களுக் கும் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஒரு சேரப் பயிற்சி அளிக்கும். ஆண்டுக்கு 33,000 வீரர்கள் வரை இங்கு பயிற்சி பெறுவர். கிளமெண்டி ராணுவ முகாமில் அமைந்துள்ள இந்தப் பயிற்சியகத் தைத் திறந்துவைத்துப் பேசிய இரண்டாவது தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங், "இந்தப் பயிற்சியகம் பல முகவைகளுக்கிடையிலான புதிய பங்காளித்துவ செயல்பாட்டை உருவாக்குவதுடன் ஏற்கெனவே உள்ளவற்றையும் வலுப்படுத்தும். மேலும் ஒத்துழைப்பு முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ள உதவும்," என்றார். புதிய பயிற்சியகம் உள்நாட்டுப் பாதுகாப்புப் பயிற்சி நிலையம், தீவுத் தற்காப்புப் பயிற்சி நிலை யங்களுடன் இரண்டு நிலையங் கள், இரண்டு பள்ளிகளைக் கொண்டிருக்கும்.

கல்வி அமைச்சரும் (உயர் கல்வி, திறன்கள்), இரண்டாவது தற்காப்பு அமைச்சருமான ஓங் யி காங் ஐலண்ட் டிஃபென்ஸ் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்டை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். கிளமெண்டி ராணுவ முகாமில் உள்ள இந்தப் புதிய பயிற்சியகத்தில் ஆயுதப்படையும் போலிஸ் படையும் இணைந்து பாதுகாப்பு செயல்முறை பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்