அமைச்சர்கள் மீது புகார் தேசிய தினப் பேரணி 2017 ஒத் எழும் சூழல் பற்றி பிரதமர்

அமைச்சர்கள் மீது புகார் தேசிய தினப் பேரணி 2017 ஒத் எழும் சூழல் பற்றி பிரதமர்

1 mins read

முறையற்ற நடத்தை என எந்த அமைச்சர் மீதாவது குற்றம் சுமத்தப்பட்டால் அவர் தம் மீதான களங்கத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தம் மீதான கெட்ட பெயரின் மூலம் அரசாங்கத்தின் நற் பெயரைப் பாதிக்கவோ சிதைக் கவோ அவர் அனுமதிக்கப்படமாட் டார் என்று நேற்று நாடாளு மன்றத்தில் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சென் ஷோ மாவ் எழுப்பிய வினாவுக்கு அளித்த எழுத்து மூலமான பதிலில் பிரதமர் குறிப் பிட்டார். அரசியல் பிரமுகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் பேசுவது தொடர்பான வழிமுறை களை பிரதமர் தமது பதிலில் விளக்கியுள்ளார்.

"அமைச்சருக்கு எதிரான ஒரு கடுமையான குற்றச்சாட்டாக அது இருந்தால் அதுதொடர்பான இதர சிறப்புப் பரிசீலனைகள் இல்லாதபட்சத்தில் அந்த அமைச்சர் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேன். "அது தொடர்பான சம்பவங் களை அமைச்சர் நாடாளுமன்றத் தில் விவரிக்க வேண்டும். குறிப் பாக, அந்தப் பிரச்சினை அவரது அரசாங்கக் கடமை தொடர்பான தாகவும் பொதுமக்கள் நலன் தொடர்புடையதாகவும் இருப்பின் அவர் அவ்வாறு செய்ய வேண்டும்.