தேசிய தினப் பேரணி 2017 ஒத்திகை தொடர்பான அச்சுப் பிரதி களின் தமிழ்மொழி மொழிபெயர்ப் பில் பிழைகள் ஏற்பட்டனவா என் றும் அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கும் வகை யில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் நேற்று நாடாளு மன்றத்தில் தற்காப்பு அமைச்சரை நோக்கி உறுப்பினர் முரளி பிள்ளை கேள்விகள் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், "தேசிய தின அணிவகுப்பு ஒத்தி கைக்குப் பயன்படுத்தப்பட்ட அச்சுப் பிரதிகளில் தமிழ் மொழி பெயர்ப்பில் பிழைகள் இருந்தன. "சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் மொழி பெயர்ப்பின் அசல் பிரதி பிழையற்று இருந்ததாகவும் அதனை அச்சிடும் போது பிழைகள் ஏற்பட்டுவிட்டன என்றும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
"துரதிருஷ்டவசமாக பிழையாக அச்சிடப்பட்ட சில பிரதிகள் அவற்றில் உள்ள பிழைகள் கண்டு பிடிக்கப்படும் முன்னரே பார்வை யாளர்களுக்கு விநியோகிக்கப் பட்டுவிட்டன. "இந்தத் தவற்றுக்காக தேசிய தினப் பேரணி நிர்வாக் குழு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. "அச்சிடப்பட்டு விநியோகத் திற்குச் செல்லும் முன்னர் அந்தப் பிரதிகளில் பிழைதிருத்தம் செய் யப்படவில்லை. "தேசிய தின அணிவகுப்பு சாதனங்களில் செய்யப்படும் எல் லாவித மொழிபெயர்ப்புகளுக்கும் பொதுவான நடைமுறைகள் உள் ளன. மேலும், தேசிய தின அணி வகுப்பு நிர்வாகக் குழு அது தொடர்பில் உள்ள வெளியீட்டு நிறுவனங்களில் வெவ்வேறு மொழிகளைச் சரியாக அச்சிடத் தேவையான நம்பத்தகுந்த கணினி மென்பொருள்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்யும்," என்று விளக்கினார் டாக்டர் இங்.

