சோதனைத் தடுப்பை மீறிய வேன் ஓட்டுநரை விரட்டிப் பிடித்த போலிசார்

சோதனைத் தடுப்பை மீறிய வேன் ஓட்டுநரை விரட்டிப் பிடித்த போலிசார்

1 mins read

சோதனை செய்வதற்காக டெர்விட் சாலையில் போலிசாரால் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை மீறி வேன் ஓட்டுநர் ஒருவர் தாம் ஓட்டிக் கொண்டிருந்த வேனை தொடர்ந்து ஓட்டிச் சென்றார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 12.40 மணிக்கு நிகழ்ந்தது. வேன் ஓட்டுநர் தடுப்பை மீறிச் சென்றதை அடுத்து, போலிஸ் கார்கள், மோட் டார் சைக்கிள்கள் ஆகியவை வேன் ஓட்டிச் சென்று கொண் டிருந்தவரை விரட்டின. போலிசாரிடமிருந்து தப்பிக்க கிச்சனர் சாலை வழியாக வேகமாகச் சென்ற கார் அங்கு வாகன நிறுத்தும் சேவை வழங்கிய 65 வயது ஆடவர் மீது மோத இருந்தது.

சாலையோர நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்தும் சேவை கூடத்தில் அமர்ந்துகொண்டிருந்த அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார். சாலையோர நடைபாதையை நோக்கி வந்த வேனை ஓட்டுநர் கடைசி நேரத்தில் திடீரென பிரேக்கை அழுத்தி நிறுத்தியதாக உயிர் தப்பிய அந்த 65 வயது திரு மைக்கல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த வேன் ஓட்டுநர் வேனிலிருந்து வெளியேறி ஓடித் தப்பிக்க முயன்றார்.

போலிசாரும் அவரைத் துரத் தினர். ஏறத்தாழ 10 நிமிடங் களுக்குப் பிறகு அந்த வேன் ஓட்டுநரை அவர்கள் கைது செய்தனர். போக்குவரத்து தொடர்பான குற்றங்களின் பேரில் அந்தச் சீன ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாமல் அந்த ஆடவர் வேன் ஓட்டியதாகக் கூறப்படு கிறது.