தொடர் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததால் கிங்ஸ்ஃபர்ட் கன்ஸ் டரக்ஷன் பிரைவட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு வேலை யிடப் பாதுகாப்பு, சுகாதார சட்டத்தின்கீழ் $130,000 அபராதத்தை மனிதவள அமைச்சு விதித்துள்ளது.
அந்த நிறுவனம் ஹில்வியூ பீக் என்ற கொண்டோமினிய குடியிருப் புத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கண்காணிப்புப் பிரிவு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டபோது 2014ஆம் ஆண்டு அக்டோபர், 2015ஆம் ஆண்டு மே மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் தெரிய வந்ததாக அமைச்சு கூறியது.
கட்டட விளிம்புகள் திறந்த நிலையில் இருந்ததற்காகவும் மாடிப் படிகள் கைப்பிடிகள் இல்லாமல் இருந்ததற்காகவும் முறையே $10,000, $19,000 அபராதத் தொகைகள் விதிக்கப்பட்டன. இவற்றுடன் கட்டுமானப் பணிகளை நிறுத்தவும் உத்தரவிடப் பட்டது.
ஹில்வியூ கட்டுமானத் தளத்தில் உயரமான இடங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்புக்குத் தேவையான கைப்பிடிகளும் தடுப்புகளும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. படம்: மனிதவள அமைச்சு

