டாக்சி நிறுத்தங்களில் அறிவிப்புப் பலகைகளை மேம்படுத்த பரிசீலனை

டாக்சி நிறுத்தங்களில் அறிவிப்புப் பலகைகளை மேம்படுத்த பரிசீலனை

1 mins read

டாக்சி நிறுத்தங்களில் பெயர்ப் பலகை, அடையாளக் குறியீடு களை மேம்படுத்துவது பற்றி நிலப்போக்குவரத்து ஆணையம் பரிசீலனை செய்கிறது. வீவோ சிட்டி கடைத்தொகுதியில் திங் கட்கிழமை அன்று ஈரடுக்கு பேருந்து ஒன்று டாக்சி நிறுத்தத் தில் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து இதனை ஆணையம் அறிவித்துள்ளது. டவர் டிரான்சிட் நிர்வகிக்கும் பேருந்து எண் 97இன் ஓட்டுநர், தெலுக் பிளாங்கா ரோட்டில் உள்ள கூரை வேயப்பட்ட டாக்சி நிறுத்தத்தை பேருந்து நிறுத்தம் என்று தவறாகக் கருதிவிட்டதாக டவர் டிரான்சிட்டின் நிறுவனத் தின் பேச்சாளர் கூறினார். அந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

கடந்த 2012 முதல் புதிதாகக் கட்டப்பட்ட கூரை வேயப்பட்ட, பயணிகளை இறக்கி, ஏற்றும் இடங்கள், டாக்சி நிறுத்தங்கள் உட்பட குறைந்தபட்சம் 4.5 மீட்டர் உயரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வரையறை உள்ளது. கிட்டத்தட்ட 4.4 மீட்டர் உயரம் கொண்ட ஈரடுக்கு பேருந்துகளும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்று ஆணையம் நேற்று தெரி வித்தது. ஓட்டுநர்களுக்கு அறிவுறுத் தும் வகையில் உயரக் கட்டுப் பாட்டை அறிவிக்கும் அறிவிப்பு கள் இடம்பெறுவதையும் ஆணையம் குறிப்பிட்டது. வெவ்வேறு கடைத்தொகுதி களை அடையாளம் காண்பதில் பேருந்து ஓட்டுநர்களுக்கு உதவு வது குறித்துக் குறிப்பிட்ட ஆணையம், உயரக் கட்டுப்பாடு அறிவிப்புகளையும் டாக்சி நிறுத்த அடையாளங்களையும் நன்கு பார்வையில் படுமாறு வைப்பது குறித்து ஆராய்வ தாகவும் கூறியது.