சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் நேற்றுக் காலை மெர்சிடிஸ்=பென்ஸ் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்தக் காரின் ஓட்டுநரும் இரு பயணிகளும் காரிலிருந்து உடனே வெளியேறிய தாக ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது. அந்தக் காரின் 60 வயது ஓட்டுநர் தமது மனைவி, மகளுடன் உணவுக் கடையைத் திறக்க பிடோக் உணவங்காடி நிலையத் திற்குச் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றிக் கொண்டதாக அந்த நாளிதழிடம் கூறினார். "நல்ல வேளையாக, அந்த நேரத்தில் மற்ற வாகன ஓட்டுநர்கள் எனது கார் தீப்பற்றிக்கொண்ட தாகத் தெரிவித்தனர். உடனே நான் காரை விரைவுச்சாலை ஓரத்தில் நிறுத்தி நாங்கள் மூவரும் வெளியேறினோம்," என்றார் அந்த ஓட்டுநர். காரின் முன்பகுதியில் மூண்ட தீ, சற்று நேரத்திலேயே மற்ற பகுதிகளுக்கு மளமள வென பரவி யது.
முழுதாகத் தீப் பற்றிக்கொண்ட மெர்சிடிஸ்-பென்ஸ் கார். படம்: ஷின் மின்

