பணியில் இருந்த தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரி ஒருவரைப் பலவந்தமாகத் தள்ளிவிட்டு ஓடிய குற்றத்திற்காக 22 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் 18ஆம் தேதி உட்லண்ட்ஸ் ஸ்குவேரில் குப்பையை கீழே வீசியதற்காக இரண்டு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட அந்த ஆடவர், ஒரு அதிகாரியை கீழே தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலமும் விசாரணை மூலமும் ஆடவரின் அடையாளத்தை அறிந்து, சென்ற மாதம் 26ஆம் தேதி ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்தனர். பலவந்தமான முறையில் அரசாங்க ஊழியரை பணியைச் செய்யவிடாமல் தடுத்ததற்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
உட்லண்ட்ஸில் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரியை தள்ளிவிட்ட ஆடவர் கைது
1 mins read

