உபி அவென்யூ 1ல் உள்ள வெஸ் டர்ன் யூனியன் பணம் அனுப்பும் சேவை கிளையில் ஆயுதம் தாங்கிய கொள்ளையில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள 58 வயது ஆடவர் நேற்று குற்றச்சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார். ஆகஸ்ட் 1ஆம் தேதி கொள்ளை யடித்துவிட்டு தப்பியோடிய ஹஷிம் ஹம்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தைக் காட்டி ஊழியரை மிரட்டி $4,000 கொள்ளையடித்துத் தப்பியோடி விட்டதாக இவர் மீது ஆகஸ்ட் 5ஆம் தேதி நீதிமன்றத் தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நடந்தபோது தலைக் கவசம், கருப்பு நிற மேலங்கி ஆகியவற்றை அவர் அணிந் திருந்தார் என போலிஸ் செய்தி கூறுகிறது.
நேற்றுக் காலை 10 மணிக்கு சம்பவ இடத்திற்கு போலிஸ் வாகனத்தில் அழைத்துவரப்பட்ட ஹஷிமிடம் காவல்துறை யினர் கொள்ளைச் சம்பவம் பற்றி கேள்விகேட்டனர். தப்பியோடாமல் இருக்க கை கால்கள் கட்டப்பட்டிருந்த ஹஷிம் தலைகுனிந்தே காணப்பட்டார். சம்பவத்தன்று குற்றச்செயல் நடந்தேறிய முறையை அவர் போலி சாரிடம் விளக்கினார். கொள்ளையடித்த பிறகு தப்பி ஓடும்போது சிறிது பணம் கீழே விழுந்த இடத்துக்கும் மிதி வண் டியை அவர் நிறுத்தி வைத்திருந்த தாக நம்பப்படும் கார்பேட்டைக்கும் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பின்னர் கொள்ளையடிப்பதற்கு முன்பு கடை ஊழியர்களை அவர் கண்காணித்த உணவகத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.

