சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம் மதுவுக்கு (படம்) கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள் ளது. மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பதவியி லிருந்து திருவாட்டி ஹலிமா யாக்கோப் விலகி யதை அடுத்து அக்குழுத் தொகுதியில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமே உள்ளனர். திருவாட்டி ஹலிமா வின் மார்சிலிங் தொகுதி யின் அடித்தள ஆலோசக ராக 42 வயது திரு ஸாக்கி நியமிக்கப்பட்டுள் ளார் என்று மக்கள் கழகம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் குறிப்பிட்டது. 2006ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த திரு ஸாக்கி, மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் களான தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், திரு ஓங் டெங் கூன், திரு அலெக்ஸ் யாம் ஆகியோருடன் இணைந்து பணியாற்று வார் என்றும் மக்கள் கழ கம் கூறியது.
இதற்கிடையே, திரு ஸாக்கி முகம்மது தாம் வகித்த மார்சிலிங் அடித்தள ஆலோசகர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஹலிமா யாக்கோப் தனது ஃபேஸ்புக் பக் கத்தில் தெரிவித்துள்ளார். "எனக்கு ஸாக்கியை பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெரி யும். அவர் மிகவும் கனிவான, நேர்மையான மனிதர். குடியிருப்பா ளர்களின் நலன்களுக்கு முதலில் குரல் கொடுப்பவர் ஸாக்கி. நாடா ளுமன்றத்தில் மக்கள் நலனுக்காக அவர் பல முறை குரல் கொடுத்தி ருக்கிறார். மார்சிலிங் தொகுதி நல்ல மனிதர் ஒருவரின் பெறுப்பில் விடப்பட்டுள்ளது," என்றார் திரு வாட்டி ஹலிமா.

