இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விருதுகள் பட்டியலில் முதல் இடத்தைப் பெறுகிறார் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் திரு எடி டியோ சான் செங். நாட்டின் ஆக உயரிய விரு தான 'தி ஆர்டர் ஆஃப் நீல உத்தமா (முதல் வகுப்பு)' விருதை அரசாங்கம் அவருக்கு வழங்கி யுள்ளது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் திரு டியோ, லீ குவான் இயூ உபகாரச் சம்பள நிதி, லீ குவான் இயூ பரிமாற்ற ஆய்வாளர் திட்டம், டாக்டர் கோ கெங் சுவீ உபகாரச் சம்பள நிதி, எஸ். ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுப் பள்ளியின் ஆளுநர் சபை ஆகியவற்றின் தலைவராகவும் சட்டச் சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் செயலாற்றி வரு கிறார்.
மேலும் 2011 அதிபர் தேர்தல் குழுவின் தலைவராகவும் 2016ல் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் தேர் தலுக்கான அரசமைப்புச் சட்ட ஆணைக் குழுவின் உறுப்பினராக வும் திரு டியோ இருந்துள்ளார். பொதுச் சேவை ஆணையத் தின் தலைவர் பொறுப்புக்கு முன் திரு டியோ, 2005ல் சிங்கப்பூர் நிர்வாகச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் 2006லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலி யாவுக்கான சிங்கப்பூர் தூதராகப் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டில் மேன் மைதங்கிய சேவை விருது திருடியோவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த நிலை உயரிய விரு தான மேன்மைதங்கிய சேவை விருதை ஜப்பானுக்கான முன்னாள் தூதர் திரு சின் சியாட் யூனும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக அறங்காவலர் குழுவின் தலைவரான திரு ஹோ குவான் பிங்கும் பெறுகின்றனர்.
திரு எடி டியோ