ராபிள்ஸ் புலவார்டில் நேற்றுக் காலை 29 வயது ஆடவர் ஒருவர் தன்னுடைய காரை கான்கிரீட் தடுப்பு ஒன்றில் மோதிவிட்டார். அந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த ஆடவர், பிறகு மருத்துவ மனையில் மாண்டார். இங் பிங் கீன் என்று அடை யாளம் காணப்பட்டுள்ள அந்த ஆடவர், தன்னுடைய ஹோண்டா சிவிக் காரை ஓட்டிச்சென்ற தாகவும் வழியில் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சறுக்கிக்கொண்டு கான்கிரீட் தடுப்பில் மோதியதாக வும் தெரிகிறது. சம்பவம் நிகழ்ந்ததையடுத்து தீயணைப்பு வாகனம், மருத்துவ வண்டி, ஆதரவு வாகனம் உள்ளிட்ட பலவற்றையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அங்கு அனுப்பியது. நேற்று பிற்பகல் சுமார் 2.50 மணிக்கு தகவல் கிடைத்து உடனடியாக அங்கு சென்ற இந்தப் படை அதிகாரிகள் திரு இங் தன்னுடைய வாகனத்தில் மாட்டிக் கொண்டு கிடந்ததைப் பார்த்தார் கள். அவரை குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு வெளியே எடுத்தனர்.
ராபிள்ஸ் புலவார்டில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள். படம்: ஸ்டோம்ப்

