மின்னிலக்க நாணயங்கள் அல்லது டோக்கன்கள் அடிப்படையிலான முதலீடுகளைக் கொள்முதல் செய்யலாம் என்று பரிசீலிக்கின்ற வாடிக்கையாளர்கள் அது பற்றி மறுபடியும் சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். இத்தகைய முதலீடுகள் குறித்து வர்த்தக விவகாரத் துறையும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் எச்சரித்து இருக்கின்றன. இவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. மின்னிலக்க டோக்கன்கள், நிகர்நிலை நாணயம் ஆகியவை தொடர்பான முதலீட்டு திட்டங்களில் ஆபத்துகள் இருப்பதாக இந்த இரண்டு அமைப்புகளும் வாடிக்கை யாளர்களுக்கு விடுத்த கூட்டறிக்கையில் எச்சரித்து இருக்கின்றன. உறுப்பினர்கள் இத்தகைய முதலீடுகளில் மிகவும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும் என்று அவை குறிப்பிட்டு இருக்கின்றன.
மின்னிலக்க நாணயங்களில் முதலீடு: பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
1 mins read

