உட்லண்ட்ஸில் பௌத்த மடாலயம் திறப்பு

உட்லண்ட்ஸில் பௌத்த மடாலயம் திறப்பு

1 mins read
667690a5-19dd-495b-b416-ae0f799ac1b1
-

சிங்கப்பூரின் வடக்குவாழ் மக்க ளுக்கு சேவையாற்றும் பௌத்த மடாலயம் ஒன்று நேற்று அதி காரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஒரு காற்பந்துத் திடலைவிடச் சற்று சிறிய அளவில் அமைந் துள்ள பி.டபிள்யூ. மடாலயத் தில் மொத்தம் 1,200 பேர் ஒரே சமயத்தில் பிரார்த்தனை மேற் கொள்ளலாம். பிரதான வழி பாட்டு மண்டபத்தைத் தவிர, 400 பேர் அமரக்கூடிய பலபயன் மண்டபம், ஒரு நூலகம், வகுப்ப றைகள், ஓர் அரும்பொருளகம் ஆகியவை அந்த மடாலயத்தில் உள்ளன. உட்லண்ட்ஸ் டிரைவ் 16ல் உள்ள இந்த ஆலயம் தீவெங்கும் உள்ள ஐந்து பௌத்த நிலையங் களுக்குத் தலைமையகமாக விளங்கும். அதற்கு 3,500 உறுப்பினர்கள் உள்ளனர். சிறப்பு விருந்தினராகப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்றைய நிகழ்ச்சி யில் கலந்துகொண்டார்.

மடாலயத் தலைமையகத்தில் நேற்று பௌத்த பாடல்களை சிறுவர்கள் உட்பட பலரும் பாடினார்கள். படம்: சாவ் பாவ்