பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்த மூன்று சம்பவங்களின் தொடர்பில் வழக்கறிஞர் எம். ரவி மீது நேற்று குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அந்த மூன்று சம்பவங் கள் ஜூலை 31ஆம் தேதி, இம்மா தம் 8ஆம் தேதி, 11ஆம் தேதி ஆகிய நாட்களில் நடந்தன. கடந்த மாதம் 31ஆம் தேதியன் றும் இம்மாதம் 11ஆம் தேதியன்றும் சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வந்த மக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். இம்மாதம் 8ஆம் தேதியன்று, சக வழக்கறிஞர் ஜேனட் சோங் அருள்தாஸுக்கு அவரது அலுவலகம் உள்ள தி எடல்ஃபி கட்ட டத்துக்கு வெளியே தாக்கி காயம் விளைத்தார்.
அவருக்கு உதவ வந்த வழக்கறிஞர் நக்கூர்ஷா அப்துல் காதிரிடம் முரட்டுத்தன மாக நடந்துகொண்டார் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும். இவற்றைத் தவிர, வீடு புகுந்து திருடிய மூன்று குற்றச்சாட்டுகளை யும் திரு ரவி எதிர்நோக்குகிறார். திரு ரவி மனநலப் பரிசோத னைக்காக மனநலக் கழகத்துக்கு அனுப்படப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் நேற்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் டில்லன் கோக், ரவி வன்முறையுடன் தாக்கியிருப்ப தால், அவர் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவராகக் கருதப்படுகிறார் என்றார்.
மனநலப் பரிசோதனையின் மூலம் ரவியின் உண்மையான மனநிலையை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அரசுத் தரப் பின் கோரிக்கையை மாவட்ட நீதி பதி கேரல் லிங் ஏற்றுக் கொண்டார். ரவி அடுத்த இரு வாரங்களுக்கு மனநலக் கழகத்தில் அனுமதிக்கப் பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார். அவர் மீண்டும் இம்மா தம் 25ஆம் தேதியன்று நீதிமன் றத்தில் முன்னிலைப்படுத்தப்படு வார். நீதிமன்றத்தின் இந்த முடிவைக் குறைகூறி, திரு ரவி 20 நிமிட அறிக்கையை வெளியிட்டார்.

