சிங்கப்பூரில் வானுயர்ந்த கட்டடங் கள் அவசியமானவை. இருந்தாலும் அவை வலசை போகும் பறவை களுக்கு ஆபத்துகளை விளை விப்பதாக இருக்கின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிங்கப்பூரின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் இருக்கும் கட்டடங் களில் பறவைகள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகம் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், காட்டுவளக் கழகம் (சிங்கப்பூர்) போன்ற அமைப்பு களைச் சேர்ந்த ஆய்வாளர்களும் அறிவியல் வல்லுநர்களும் அந்த ஆய்வை நடத்தினர். சிங்கப்பூரில் 1998வது ஆண் டிற்கும் 2016வது ஆண்டிற்கும் இடையில் 237 பறவைகள் கட் டடங்களில் மோதிக்கொண்டுவிட் டன.
அவற்றில் சுமார் 66% பறவைகள் அல்லது 157 பறவைகள் மாண்டுவிட்டன என்று ஆய்வு குறிப்பிடுகிறது. அந்த 237 சம்பவங்களில் 115 சம்பவங்கள் மத்திய வாணிப வட்டாரத்தில் நிகழ்ந்தன. மத்திய நீர்த்தேக்க காட்டுவளப் பகுதியின் விளிம்புப் பகுதியில் இருக்கும் சில குடியிருப்பு வட்டாரங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந் தன. சிங்கப்பூரின் மேற்கு பகுதியைப் பார்க்கையில் கட்டடங்களில் பறவைகள் மோதிக்கொண்ட சம்பவங்கள் 57 நிகழ்ந்துள்ளன. இந்த ஆய்வு தென்கிழக்கு ஆசியா வில் பறவைகள் கட்டடங்களில் மோதிக்கொள்வதன் தொடர்பில் நடத்தப்பட்ட முதலாவது ஆய்வாக இருக்கிறது.
பறவைகளைப் பார்க்கையில் குறிப்பிட்ட சிற்றினங்களைச் சேர்ந்த பறவைகள் மற்ற பறவை களைவிட அதிகமாக கட்டடங் களில் மோதிக்கொண்டுவிடுகின் றன என்பது தெரியவருகிறது. வானுயர்ந்த கட்டங்களில் மோதிக்கொள்ளக்கூடிய ஆபத்து வலசைபோகும் பறவைகளுக்கே அதிகமாக இருக்கிறது. இத் தகைய பறவைகள் நகரப் பகுதி களைக் கடந்து செல்லும்போது கட்டடங்களில் அவை மோதிக் கொள்கின்றன.

