செந்தோசாவின் டைகர் ஸ்கை டவர் கோபுரத்தில் சனிக்கிழமை 39 பேர் 4 மணி நேரம் மாட்டிக் கொண்டார்கள். இதனையடுத்து, அங்கு சேவை நிறுத்தப்பட்டது. சிக்கிச்கொண்டவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் பூமியிலிருந்து 25 மீ. உயரத்தில் 4 மணி நேரம் காத் திருக்க வேண்டியிருந்தது. பிறகு அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கினர். செந்தோசாவில் இருக்கும் டைகர் ஸ்கை டவர் கோபுரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதே இதற்கான காரணம். சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதனையடுத்து கட்டட, கட்டுமான ஆணையம் அந்தச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டது. தன்னுடைய பொறியாளர்கள் புலன்விசாரணை நடத்தி வருவ தாக அறிக்கை ஒன்றில் ஆணை யம் தெரிவித்தது. கோபுரத்தில் சனியன்று மாலை 5.35 மணிக்குப் பிரச்சினை ஏற்பட்டது. கடைசியில் இரவு 9.45 மணிக்கு அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கு முன்னதாக பொறி யாளர்கள் வழக்கமான சோதனை களை அந்தக் கோபுரத்தில் நடத் தியதாக ஸ்கை டவர் இயக்குநர் அலெக்சாண்டர் மெல்சர்ஸ் தெரிவித்தார். மிகவும் கடுமையான பராமரிப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கின் றன. இருந்தாலும் இத்தகைய சம்ப வத்திற்கு என்ன காரணம் என்பதை உறுதிப்படுத்த முடிய வில்லை என்றார் அவர்.