நீச்சல் குளத்தில் கார்: மாது கைது; ஆடவர் இன்னமும் சிக்கவில்லை

நீச்சல் குளத்தில் கார்: மாது கைது; ஆடவர் இன்னமும் சிக்கவில்லை

1 mins read

செம்பவாங் கிரசெண்டில் இருக் கும் ஸ்கை பார்க் ரெசிடன்ஸ் வீட்டுத் தொகுதியின் நீச்சல் குளத்தில் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி ஒரு காரை யாரோ இறக்கிவிட்ட சம்பவம் தொடர்பில் 31 வயது மாதை போலிஸ் கைது செய்திருக்கிறது. அந்த மாது எப்போது, எங்கு கைதானார் போன்ற விவரங்களை போலிஸ் தெரிவிக்கவில்லை. காரை ஓட்டி வந்தவர் ஓர் ஆடவர் என்று நம்பப்படுகிறது. அவர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு மாது பல தடவை கைத்தொலைபேசி மூலம் பேசி யது தெரிந்தது. அந்த மாதுதான் இப்போது கைதுசெய்யப்பட்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.