தேசிய சேவையை முடிக்கும் படை வீரர்களுக்கு உதவும் வேலைச்சந்தை

தேசிய சேவையை முடிக்கும் படை வீரர்களுக்கு உதவும் வேலைச்சந்தை

1 mins read

முழு நேர தேசிய சேவையை முடிக்கும் தறுவாயில் இருக்கும் படை வீரர்களுக்கு வேலை வாய்ப் புகளைப் பெற்றுத்தர ஒரு நாள் வேலைச் சந்தை உதவியது. இதில் கிட்டத்தட்ட 2,000 வேலை வாய்ப்புகள் இருந்தன. கடந்த நவம்பர் 2015 முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த வேலைச் சந்தை இம்முறை எட்டாவது தட வையாக இடம்பெற்றது. இது வாழ்நாள் கற்றல் கழகத்தில் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு காலாண்டுக்கும் நடத்தப்பட்டு வந்த இந்த வேலைச் சந்தை இரு வேறு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் ஒன்பது வெவ்வேறு துறை யைச் சேர்ந்த 30 நிறுவனங்கள் கலந்துகொண்டன. வேலை வாய்ப் போடு மேற்கல்வி வாய்ப்பு தொடர்பான கண்காட்சியும் நடை பெற்றது. முதல்முறையாக தேசிய சேவையாளர்களுக்கென சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ் வில், சேவைக் காலம் முடிந்த பின்னர் அவர்கள் விரும்பும் மேற்கல்வி அல்லது தொழிலைத் தொடர வாய்ப்புகள் கொடுக்கப் படுகின்றன. ஏற்பாட்டாளர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய சேவையாளர்களை முதலில் தங்கள் பெயரைப் பதிந்துகொள்ளக் கேட்டுக்கொண்டனர்.