நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்க பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரர்களுக்கு கூறும் அறிவுரை: சரியான உணவை உண்பது, அதிகமாக உடற்பயிற்சி செய்வது, உடல்நலப் பரிசோதனையை மேற் கொள்வது, சுவைபானம் குடிப்ப தற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது. எம்ஆர்டி நிலையத்துக்கு நடந்து செல்வது, மின்தூக்கிக்குப் பதிலாக படிகளில் ஏறுவது, பால், சீனி சேர்த்த தேநீருக்குப் பதிலாக வெறும் தேநீரைப் பருகுவது போன்ற சின்னச்சின்ன விஷயங் கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் பிரதமர்.
முதுமைக்காலத்தில் நோய் வாய்ப்படுவதற்கு முக்கிய காரணம் நீரிழிவு என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். ஒட்டுமொத்த மாக ஒன்பதில் ஒரு சிங்கப்பூரருக்கு நீரிழிவு உள்ளது. இதில், வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளுடன் ஒப்பிட, அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் "உலக சாம்பி யனாக" உள்ளது என்றார் அவர். குறிப்பாக, இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இது ஆபத்தான பிரச்சினையாக உள்ளது. இந்தியர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஆறு பேருக்கு நீரிழிவு உள்ளது. மற்ற இனத்தவருடன் ஒப்பிட, இது ஆக அதிகம் என்பதை புள்ளிவிவரங் களுடன் பிரதமர் விளக்கினார். எத்தனை ஆண்டுகள் வாழ் கிறோம் என்பதல்ல, எத்தகைய தரமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறிய திரு லீ, சிங்கப்பூரர்கள், இறுதிக் காலத்தில் சராசரியாக எட்டு ஆண்டு காலம் நோய்வாய்ப்படுகிறார்கள் எனக் கூறினார்.

