சிங்கப்பூரை அறிவார்ந்த தேசமாக ஆக்குவதற்கு நான்கு துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தவிருக் கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார். அறிவார்ந்த தேசமாக ஆவ தற்கு உதவும் சரியான அம்சங்கள் சிங்கப்பூரில் இருந்தாலும் பல துறைகளில் மற்ற நகரங்களைவிட சிங்கப்பூர் பின்னணியில் இருப் பதை திரு லீ சுட்டிக்காட்டினார். த க வ ல் தொ ழி ல் நு ட் ப த் தி ன் முழு அனுகூலத்தையும் பயன் படுத்திக்கொண்டு அறிவார்ந்த தேசமாக மேம்படும் முயற்சிகளில் மின்னணு பணப்பட்டுவாடா ஒன்று என்று திரு லீ தெரிவித்தார். சிங்கப்பூரில் இந்த முறை இருக்கிறது என்றாலும் இதில் ஏராளமான வெவ்வேறான முறை களும் திட்டங்களும் இருப்பதால் இந்தத் தொழில்நுட்பத்தின் அனு கூலத்தை நாம் முற்றிலும் அனு பவிக்க முடியவில்லை என்று அவர் விவரித்தார்.
மக்கள் பல பண அட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது. நிறுவனங்கள் அவற்றுக்கு ஏற்ற பல சாதனங்களைப் பொருத்த வேண்டி உள்ளது. இதனால் பயனீட்டாளர்களுக்கு சங்கடம் ஏற்படுகிறது. நிறுவனங் களுக்குச் செலவு அதிகரிக்கிறது. ஆகையால் பெரும்பாலானவர் கள் அதாவது 10 பேரில் ஆறு பேர் ரொக்கத்தை அல்லது காசோலை யைப் பயன்படுத்தவே விரும்புகிறார் கள். நாம் இந்த முறையை எளிமைப்படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும் என்று திரு லீ வலி யுறுத்தினார். சிங்கப்பூர் நாணய ஆணையம் இதன் தொடர்பில் தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றார் அவர். இந்த ஆணையமும் வங்கி களும் சேர்ந்து PayNow என்ற புதிய சேவையை சோதித்துப் பார்க்கின்றன. விரைவில் 'கியூ ஆர் குறியீடு' வாடிக்கையாளர் களுக்கு கிடைக்கவிருக்கிறது. இது அவர்களுக்கு வசதியாக இருக்கும். மலிவாகவும் இருக்கும். பாதுகாப்பாகவும் இருக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
வாகனம் நிறுத்திவைக்க இஆர்பி முறை, கைத்தொலைபேசிகள் இருந்தாலும் இன்னமும் நாம் வாகனத்தை நிறுத்திவைக்கும் கூப்பன்களையே பயன்படுத்து கிறோம். ஏராளமான நகர்களில் வாகன நிறுத்திவைப்பு செயலி கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மின்னிலக்கமயத்திற்கு மாறும்படி வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தையும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தை யும் தான் வலியுறுத்தி வருவதாக திரு லீ குறிப்பிட்டார். இதன் தொடர்பில், அரசாங்கம் parking.sg என்ற ஒரு கைத் தொலைபேசிச் செயலியை உருவாக்கி இருக்கிறது. எவ்வளவு நேரத்திற்கு நீங்கள் வாகனத்தை நிறுத்தி வைக்கிறீர்களோ அந்த நேரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்த இந்த முறை அனுமதிக் கிறது. இந்தச் செயலி அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று திரு லீ அறிவித்தார்.

