சிங்கப்பூரில் நீரிழிவு நோயின் பாதிப்பை ஒடுக்கும் தேசிய முனைப்பின் ஒரு பகுதியாக, குளிர்பானங்களில் சீனியின் அள வைக் குறைக்கப் போவதாக சுவைபானத் தயாரிப்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இந்த முயற்சி இத் துடன் நின்றுவிடாது என்று பிர தமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக் கிழமை கூறினார். சுவைபானம் குடிப்பதை மக்கள் குறைத்துக்கொள்ள உதவும் வழி களை அரசாங்கம் ஏற்கெனவே ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க சிங்கப்பூரர்கள் உடல் நலப் பரிசோதனை செய்து கொண்டு, அதிகமாக உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் அதிக கவனமாக இருக்கவேண் டும் என்றும் பிரதமர் ஆலோசனை கூறினார். நீரிழிவு நோயால் உத்தேசமாக 400,000 சிங்கப்பூர்வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரில் ஒருவருக்குத் தனக்கு நோய் இருப்பது தெரியாது. சீனிக்கு எதிரான போராட்டம் உலகளாவிய போராட்டமாகும். மெக்சிகோ, புருணை போன்ற சில நாடுகளில் சீனி வரி விதிக்கப் படுகிறது. சிலி, பிரிட்டன் போன்ற வேறு சில நாடுகள், சீனி அதிக மாக இருக்கும் பானங்களில் எச்ச ரிக்கை முத்திரைகளை ஒட்டியுள் ளன.
ஆனால், இந்நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றார் திரு லீ. ஏனெனில், பயனீட்டாளர்கள் வேறு வழிகளில் இனிப்பை உட்கொள்ளக் கூடும். "வேறு சிலர் சுவைபானங்களின் அளவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள் - 'பிக் கல்ப்' இனி கிடையாது," என்று செவன்- லெவன் கடையின் பிரபலமான பானத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி னார் திரு லீ.
இவ்வாண்டு தேசிய தினப் பேரணிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு அரங்கத்தின் வெளியே சுகாதார மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் (வலது) காலடிகளைக் கணக்கிடும் கருவியை அன்பளிப்பாக வழங்கினார்கள். (இடது படம்) அந்தக் கருவியைக் கைக்கடிகாரம் போல அணிந்துகொள்ளலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

