வாகன நிறுத்துமிட கட்டணச் செயலி: வரவேற்கத்தக்க தொழில்நுட்பம்

வாகன நிறுத்துமிட கட்டணச் செயலி: வரவேற்கத்தக்க தொழில்நுட்பம்

2 mins read
617c83e9-7de4-4949-9f57-e7a05499c1f2
-

அக்டோபர் மாதத்திலிருந்து, வாக னங்களை நிறுத்திவைக்கும் வாக னமோட்டிகள் கூப்பனுக்குப் பதி லாகக் கைபேசி செயலி மூலம் கட்டணம் செலுத்தலாம். புதிய 'Parking.sg' செயலியை நகர மறுசீரமைப்பு வாரியம், வீட மைப்பு வளர்ச்சிக் கழகம், அர சாங்கத் தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து உருவாக் கின. சாலையோர வாகன நிறுத்து மிடங்கள் உட்பட சுமார் 1,150 வாகன நிறுத்துமிடங்களில் காகி தக் கூப்பன்களுக்குப் பதிலாகச் செயலியைப் பயன்படுத்தலாம். "தேவையற்ற வாகன நிறுத் துமிடச் சிரமங்களை வாகனமோட் டிகள் தவிர்ப்பதற்கு இது உதவும்," என்று ஞாயிற்றுக்கிழமை தேசிய தினப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

அறிவார்ந்த தேசத்தை உரு வாக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சியின் முக்கிய இலக்கு தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு மக்க ளின் வாழ்க்கையை அதிக வசதி யாக்குவதே என்றார் திரு லீ. ரொக்கப் பணமின்றி செயலி மூலம் கட்டணம் செலுத்தும் வாக னமோட்டிகள் தங்களது வாகன உரிம எண்ணை அழுத்தி, வாகன நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுத்து, எவ்வளவு நேரம் வாகனத்தை நிறுத்தி வைக்க எண்ணுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டால் போதும். ஒவ்வொரு நிமிட அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும். எண் ணியதைவிடக் குறைவான நேரம் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தால், அதற்குரிய கட்டணம் திருப்பித் தரப்படும்.

தற்போதைய காகிதக் கூப்பன் கட்டண முறையில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் வாகனமோட் டிகள் குறைந்தது 60 காசு கட்டு கிறார்கள். குறைவான நேரம் நிறுத்தி வைப்பவர்கள் குறைவான கட்டணம் செலுத்த வழியில்லை. வாகனம் நிறுத்தி வைக்கப்படும் நேரத்தை நீட்டிக்க விரும்புவோ ருக்கும் செயலி பயனளிக்கும். ஏனெனில், அவர்கள் வேறிடத்தில் இருந்தபடியே இதைச் செய்யலாம். தற்போது, வாகனமோட்டிகள் நேரத்தை நீட்டிக்க விரும்பினால், வாகனத்திற்குத் திரும்பிச் சென்று கூடுதல் கூப்பன்களை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அபரா தம் விதிக்கப்படக்கூடும். சிங்கப்பூரில் உலகத் தரமிக்க சாலைக் கட்டண முறையும் ஏராள மான சிங்கப்பூரர்களிடம் திறன் பேசிகளும் இருந்தபோதிலும், கடந்த 40 ஆண்டுகளாக வாகன மோட்டிகள் வாகனத்தை நிறுத்தி வைக்க கூப்பன்களைக் கிழித்துக் கொண்டிருப்பதாகத் திரு லீ குறிப் பிட்டார்.