கரையோரப் பூந்தோட்டங்களில் மீண்டும் வண்ணமயமான விளக்குக் கூண்டு திருவிழாவை எதிர்பார்க்கலாம். இவ்வாண்டு நான்காவது முறையாக செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறும். முதல் நாளான செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 7.30 மணி யளவில் விளக்குக் கூண்டு திரு விழாவை பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, உள்துறை இரண்டாம் அமைச் சருமான டெஸ்மண்ட் லீ அதி காரபூர்வமாகத் தொடங்கி வைக் கிறார். இம்முறை மீன்பிடிக் கிராமம், அறுவடை, வளர்ச்சி போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் எண் ணற்ற விளக்குக் கூண்டுகளை பார்வையாளர்கள் ரசித்து மகிழ லாம். இதுவரை இல்லாத அளவுக்கு நீரில் 1,250 சதுர மீட்டர் பரப்பளவு வண்ண விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டிருக்கும். தங்க தானி யங்கள் மறக்க முடியாத அனுபவ மாக இருக்கும். இதற்காக விளைச்சல் நிலம்போல் காட்சி யளிக்கும் ஆற்றின் மீது 4,000 ஒளியூட்டப்பட்ட நெற்கதிர்களைக் காணலாம்.
கரையோரப் பூந்தோட்டங்களில் மீண்டும் விளக்குக் கூண்டு திருவிழா
1 mins read
-

