மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் மரணம்; பரமகுரு ராமசாமிக்கு சிறை, தடை

மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் மரணம்; பரமகுரு ராமசாமிக்கு சிறை, தடை

1 mins read

மோட்டார்சைக்கிள் ஓட்டுநருக்கு மரணத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. பரமகுரு ராமசாமி, 34, என்ற மலேசியாவை சேர்ந்த அந்த லாரி ஓட்டுநருக்கு ஐந்தாண்டுகள் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது. துவாஸ் வெஸ்ட் ரோட்டிலிருந்து வலது பக்கம் திரும்பி வெளி யேறியபோது சாலையை முறையாக கவனித்து வாகனத்தை ஓட்ட தான் தவறிவிட்டதை பரமகுரு ஒப்புக்கொண்டார். அதன் காரணமாக கோ பூன் சோங், 27, என்ற மோட்டார் சைக்கிளோட்டி அந்த லாரியின் வலதுபுற பின்பக்க சக்கரத்தின் கீழே மாட்டிக்கொண்டார்.

அந்தச் சம்பவத்திற்குச் சுமார் 30 நிமிடம் கழித்து திரு கோ மரணம் அடைந்தார். திரு கோவும் மலேசியாவை சேர்ந்தவர். இந்தச் சம்பவம் துவாஸ் வெஸ்ட் ரோட்டில் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி காலை சுமார் 7.40 மணிக்கு நிகழ்ந்தது. இந்த வழக்கில் முன்னிலை யான அரசாங்க தரப்பு வழக்கறிஞர் ஜெயராஜ் வாதிடுகையில், பரமகுரு கனரக வாகனத்தை ஓட்டி வந்ததாகவும் போக்குவரத்து விதிமுறைகளை அவர் மீறியிருக் கிறார் என்றும் குறிப்பிட்டு இதற் காக அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண் டார். பரமகுரு தனக்கு விதிக் கப்பட்ட சிறைத் தண்டனையை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க அனுமதிக்கப்பட்டது.